Ads4
Current Affairs News For TNPSC CCSE-IV Exam
03 டிசம்பர் 2017
தமிழ்
உலக செய்திகள்
- வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்டறியும் சோதனை (அணு ஆயுதத் தாக்குதல் அபாய சங்கொலி) ஹவாய் தீவில் (அமெரிக்கா) மேற்கொள்ளப்பட்டது.
- லண்டனில் நடந்த சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் உறுப்பினராக ‘பி’ பிரிவில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு” ரஷியாவில் நடைபெற்றது.
- நெடுஞ்சாலைகளிலும் ஃபாஸ்ட் டேக் என்ற மின்னணுக் கட்டண வசூல் முறை டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
- பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் வழங்கம் திட்டத்தை தெலுங்கானா தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- பதினேழு வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான “ரக்பி போட்டியில்” இந்தியா 4-ஆவது இடம் பிடித்தது.
- ஊக்க மருந்து உட்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் 3 ரஷ்ய வீரர்களுக்கு குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- குத்துச் சண்டைக்கான தேசிய கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்து மேரி கோம் ராஜிநாமா செய்துள்ளார்.
- ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில்> அகமதாபாத் மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவில் ஹெய்.எஸ்.பிரணாய்> தைபேவின் தை ஸீயிங் (உலக தரவரிசையில் மகளில் பிரிவில் முதல் இடத்தில் இருக்கும்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வர்த்தக செய்திகள்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி> ‘நண்பன்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
- கூட்டுறவு சங்கங்கள் ‘வங்கி’ என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
- “நாது லா கணவாய்” (இந்திய – சீன : சிக்கிம் மாநிலம்) வழியாக 2017ல் ரூ.3.54 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
புதிய நியமனம்
- இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராக “சலில் எஸ் பரேக்”; தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- டிசம்பர் 03 – சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
முக்கிய பிரமுகர்களின் பயணம்
- அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் நாளை பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியதை நாசாவின் ஜூனோ விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
Related Posts